திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்குபதிவை பெறும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் டி.வி. எஸ்.டோல்கேட் மண்ணார்புரம், கே.கே.நகர்,சத்திரம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம் பொன் நகர் திருவெறும்பூர் காட்டூர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான சோமரசன்பேட்டை அதவத்தூர், போசம்பட்டி, சமயபுரம், வாளாடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வருகின்ற ஏப்ரல் 19ம்தேதி தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது திருச்சி மாவட்டத்தில் 100% சதவீதம் வாக்குபதிவு பெறவும் பொதுமக்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் விலைமதிப்பற்ற நமது வாக்கை விற்பனை செய்யாமல் மனசாட்சி படி நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் வாக்கை பயன்படுத்தி சரியான நபரை தேர்தெடுக்க வேண்டும் என்றும் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான மார்ட்டின் அவர்கள் தலைமை தாங்கி பேருந்து பயணிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் வின்சென்ட் சாக்ஸிடு குடும்ப நல ஆலோசகர் சசி சமூக ஆர்வலர் பாத்திமா கண்ணன் தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் தப்பி சத்தியாராக்கினி இறகுகள் அமைப்பின் நிறுவனர் ராபின் நிர்வாகிகள் மரியா மெர்சி ஹேமலதா சமூக ஆர்வலர்கள் ராபி ஆர்ம்ஸ்ட்ராங், சக்திவேல் மற்றும் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லிகொடி விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு இணை செயலாளர் எழில் மணி ஆரோன், சாமுவேல் லோகேஷ் ,நந்தா, கிருஷ்ணா, அலெக்சாண்டர்,ஷங்கர், பிரபு,சரவணன், மணிகண்டன், கார்த்தி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியூமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *