திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2-நாள் கையுந்துபந்து போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று துவங்கியது.
இந்த கையுந்துபந்து போட்டியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
முதல் நாள் கையுந்துபந்து போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் அணியும், வி வி சி அணியும் மோதி விளையாடியது.
மேலும் இந்த மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டியில் திருச்சி கேர் அகாடமியின் நிர்வாக இயக்குனர் முத்தமிழ் செல்வன் கலந்து கொண்டார் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் செயலாளர் கோவிந்தராஜன் செய்தார்.