திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறையில் மூலம் 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக வந்துள்ளது தமிழகத்தில் 1498 காவல் நிலையங்கள் உள்ளது அதில் 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் புகார்கள் வந்துள்ளது. காவலர்கள் முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப் மூலம் 5531 பேரை இதுவரை கண்டறிந்து உள்ளதாக குறிப்பிட்டார். அறிவியல் வளார்ச்சி,புதிய தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதியது. ரோபோ ஆபேரஷன் செய்வது டெக்னாலஜி வளர்ச்சி. தமிழ்நாடு போலீஸ் தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால் இருந்த இடத்தில் காகாணிக்க முடிகிறது என பேசினார். அருகில் என்.ஐ.டி துணை இயக்குனர் அருண் குமார், கமிஷனர் சத்திய பிரியா, எஸ்பி சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய தொழில்நுட்ப கழகத்தின் வளாகத்தில் மாணவர்கள் கண்டுபிடித்த ட்ரோன் கேமரா செயல்பாட்டை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.