ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கைகளை எழுதி அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடத்தினர். 

 

அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் சாலையோரமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்ஐடி கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலை துறையினரால் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு நோட்டீஸ் அளித்து காலி செய்கின்றனர்.

இது உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசியல் சட்டம் 2015 மாநில சட்டம் ஆகியவற்றை எறிந்துவிட்டு சாலையோர தொழிலாளர்களை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த முயன்று வருகிறது. மேலும் இந்தியாவில் எந்த ஒரு மாநகரத்திலும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது இங்கு மட்டும் மாநகராட்சிக்கு எப்படி வந்தது. ஆகவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு வேலை கொடு அல்லது சுய தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற விடுங்கள் இல்லையென்றால் குடும்பத்தோடு கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி அனுப்பும் போராட்டம் இன்று நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சமூக நீதிப் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம், ரெட் பிளாக் பார்டி, மக்கள் உரிமை கூட்டணி, அகில இந்திய ஏழை மக்கள் கட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.