திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்டஒருங்கிணைப்பாளராக உள்ள அருண் தலைமையில் திமுகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

 

கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ் குழுக்களிலும் சமூக வலைத் தளங்களிலும் தமிழக முதல்வர் குறித்து தென்னூரை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சாட்டையடி சகாபுதீன் என்ற நபர் முன்னாள் அமைச்சரை நாய் என்றும் எந்த நாய் ஆட்சிக்கு வந்தாலும் என்று தமிழக முதல்வரையும் முன்னாள் முதல்வர்களையும் மேலும் அரசை கொலைகார ஆட்சி என்றும் சிறைவாசிகளை விடுதலை செய்யாவிட்டால் ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் ஒன்று திரட்டி போராடுவேன் என்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும் உன்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் காணொளி மூலம் பரப்பி வருவதாகவும்.

இந்த காணொளிகள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால் மேற்கொண்ட நபர்மீது உடனே நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இன்று திமுகவில் சேர்ந்த திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில்,மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா, மேற்குத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, ஸ்ரீரங்கம் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், அந்தநல்லூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணிகண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.