திருச்சியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிட திருச்சி வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

முதல்வரிடம் அளிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

100 நாட்கள் வேலை திட்டம் கொண்டு வந்ததே கோடை காலங்களில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகத்தான் . ஆனால் , தற்பொழுது 100 நாட்கள் வேலை திட்ட ஆட்களுக்கு விவசாய பணிகள் நடைபெறும் காலத்திலும் வேலை கொடுப்பதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை . எனவே , விவசாய பயிர் நடவுகளை எடுக்கும் சமயத்தில் 100 நாட்கள் வேலை திட்ட ஆட்களை விவசாய பணிக்கு விரும்பும் விவசாயிகளுக்கு திருப்பிவிட்டால் பாதி சம்பளத்தை கொடுக்க விவசாயிகள் தயாராக உள்ளோம். அதேபோல் காவிரியில் 10 இடங்களிலும் , கொள்ளிடத்தில் 10 இடங்களிலும் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட வேண்டுகிறோம். Scale of Finance ன் படி நெல்லிற்கு , கரும்புக்கு , வாழைக்கு கடலைக்கு , மக்கா சோளம் . பருத்திக்கும் மற்ற விவசாய விளை பொருளுக்கு கூட்டுறவு சங்கத்தில் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு பணம் தரவேண்டுமென்று உத்திரவு உள்ளது . ஆனால் கூட்டுறவு சங்க செயலாளர் தனது விருப்பம் போல பணம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் VAO அடங்கல் கொடுத்தாலும் , வங்கிகளுக்கு சென்று கடன் இல்லாத சான்றும் , நிலஉரிமையாளிடம் ரூ . 100 / – பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வா என்றும் மிரட்டுகிறார்கள் . கடன் கொடுப்பது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்குத்தானே தவிர நிலத்திற்கு அல்ல என்று உயர் அதிகாரிகள் சொன்னாலும் , கூட்டறவு சங்க செயலாளர்கள் கேட்க மறுக்கிறார்கள் . விவசாயிகளை ஏமாற்றாமல் இருக்க உதவிட வேண்டுகிறோம் . 1 கிலோ பொன்னி அரிசி ரூ . 56 விற்கிறது . அதில் 1 கிலோ நெல்லுக்கு பாதி விலை என்று கணக்கிட்டால் ரூ . 28 தர வேண்டும் . 100 கிலோ நெல்லுக்கு தாங்கள் ரூ .2,500 / – தருவதாக கூறியிருக்கிறீர்கள் . அதை கொடுத்து உதவிட வேண்டுகிறோம் . 500 ஏக்கருக்கு ஒரு DPC நேரிடை நெல் கொள்முதல் நிலையமும் குறைந்தது ஒருநாளைக்கு 40 கிலோ மூட்டையில் 3000 மூட்டை கொள்முதல் செய்யவும் , ஒரு மூட்டை நெல்லை அள்ளி மூட்டையில் பிடித்து தைத்து லாரியில் ஏற்ற விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ .3.24 கூலியாக அரசு கொடுப்பதை ரூ . 10 ஆக உயர்த்தி கொடுத்தால் தான் ரூ . 100 லஞ்சம் கேட்பதை தடுக்க முடியும்.

2016 – ம் ஆண்டு ஜெயலலிதா அம்மா அரசு சிறு குறு விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடி செய்தது . எங்கள் சங்கம் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு எல்லா விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய உத்திரவு பெற்றோம் . திரு . எடப்படியார் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொழுது குறுகிய கால கடனை மத்திய கால கடனாக மாற்றியதால் 2020 – ம் வருடம் கடன் தள்ளுபடியில் அது சேர்க்கப்படாமல் உள்ளது . அந்த கடனையும் தள்ளுபடி செய்ய உத்திரவிட வேண்டுகிறோம் . * 50-60 ஆண்டுகளாக தாத்தா மகன் . பேரன் சாகுபடி செய்து வரும் நிலத்தில் தாத்தா பெயரில் குத்தகை சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் , பேரனும் பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு சில VAO மிரட்டி சாகுபடி கணக்கு கொடுக் மறுக்கிறார்கள்.சில VAO க்கள் நிலத்தின் உரிமையாளரை கோர்ட்டில் கேஸ் போட சொல்லி எந்த தடையுத்திரவும் வாங்காமல் இருக்கும் பொழுதே பணம் கொடுத்தால் அடங்கல் இல்லையென்றால் கோர்ட் , கேஸ் உள்ளது என்று அடங்கல் தர மறுக்கிறார்கள் . காவிரியில் வீணாக கடலில் கலக்கும் வெள்ளநீரை அய்யாறுடன் இணைக்க உத்தரவிட வேண்டுகிறோம் . காட்டு கருவை முட்களை எல்லாம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் . காவிரியில் கலக்கும் சாக்கடை , காவிரியின் கரை ஓரங்களில் வசிப்பவர் நேரிடையாக மலம் சிறுநீரை காவிரியில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் . * காட்டு மிருகங்கள் , விவசாயிகளின் பயிர்களை அழித்தால் உடனடியாக உரிய நஷ்பாடு கிடைக்கவும் . காட்டு பன்றியை கேரளாவில் காட்டு மிருகங்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது போல் தமிழத்திலும் எடுத்து விவசாய நிலங்களை காட்டுபன்றி அழித்தால் விவசாயிகள் காட்டு பன்றிகளை பிடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுகிறோம் . மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையில் பெய்யும் மழைநீரை ஆலடியாறு அணையில் தேக்கி வைத்துதை ஆலடியாறு அணையில் துளையிட்டு கீழ் கூடலூர் , கம்பம் , உத்தமபாளையம் , போடிநாயக்கனூர் . தேனி . பெரியகுளம் , வெள்ளோடு , திண்டுக்கல் , எரியோடு , கடவூர் வழியாக மணப்பாறையில் உள்ள பொன்னனி ஆறு அணைக்கு கொண்டு வந்தால் தேனி , மதுரை . திண்டுக்கல் , திருச்சி மாவட்டங்களிலும் உள்ள மக்கள் பயன் அடைவார்கள் . இதற்கு உதவிட வேண்டுகிறோம் . இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் சந்திப்பின்போது மாநில தலைவர்வர்கள் மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தி தொடர்பாளர் வரப்பிரஹாஸ், மற்றும் படையப்பா ரெங்கராஜ், குணசேகரன், பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *