மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து. இந்து முன்னணியினர் திருச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தஞ்சையை மட்டுமின்றி தென்கிழகு நாடுகளையும் ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மாபெரும் மன்னராக விளங்கிய ராஜேந்திர சோழன் அவர்கள் தனது காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலைக் கட்டினார் என்பதும் அந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரை தினம் அன்று ஒவ்வொரு ஆண்டும் பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ஆடி திருவாதிரை தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அடுத்த ஆண்டில் இருந்து மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை பிரமாண்டமாக அரசே கொண்டாடும் என்றும் அவர் தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜராஜ சோழனின் பிறந்ததினத்தை அரசு விழாவாகவும் மற்றும் அவருக்கு மணிமண்டபம் அமைத்து திருவுருவச்சிலை அமைக்க வேண்டி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்திவந்தனர். தற்போது அதற்கான உத்தரவை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே இந்து முன்னணியினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் குமார், மாநகர் மாவட்ட பேச்சாளர் மணிகண்டன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சப்த ரிஷி, அரியமங்கலம் மண்டல் தலைவர் சந்தோஷ், கோஅபிஷேகபுரம் மண்டல் பொதுச் செயலாளர் கணேஷ், ஸ்ரீரங்கம் மண்டலச் செயலாளர் பூபாலன், விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.