உலகில் சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கும் அந்த நம்பிக்கையின் படி நடந்தால் வெற்றி கிடைக்கும். அது போலத்தான் சிலருக்கு சில எண்கள் ராசியாக இருக்கும். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ராசியாக நம்பர் 7 எண்ணாக அமைந்துள்ளது. எப்படி என்றால் 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இன்றைய தினம் 7ஆம் தேதி ‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’… என்று உச்சரித்து தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் உட்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எல்லாமே 7 வரும் வகையில் அமைந்துள்ளது. 7ஆம் தேதி, 133 எம்எல்ஏக்கள் ஆதரவு, மொத்தம் 34 அமைச்சர்கள் என கூட்டுத்தொகை 7 வரும் வகையில் அமைந்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் 7 உறுதிமொழிகளை அளித்துள்ளார்.எண்ணியல் ஜோதிடப்படி 7ஆம் எண் கேதுவிற்கு உரியது. 7ஆம் எண் ஆத்மார்த்தமானது. வெற்றியைத் தேடித்தரக்கூடியது. இந்த எண்ணுக்கு நட்பு எண்கள் 8,6,5, பகை எண்கள் 1,2,9. பெருமாளுக்கு உகந்த ஏகாதசி இன்றைய தினம் ஏகாதசி திதி. பெருமாளுக்கு உகந்த திதி. சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாப விமோசினி ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யும் நற்காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *