தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதும்
1.கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000ம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் அரசாணையில் கையெழுத்திட்டார். இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
2. வருகிற 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது.
3. மகளீர் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல் படுத்தப்படுகிறது.
4. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வுக்காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
5. கரோனா சிகிச்சைப்பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார்