முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னல் அருகே உள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பாப்பு பெஞ்சமின் இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;-

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இந்திய தேசத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் அதில் பசுமைப் புரட்சி வெண்மை புரட்சி நில உச்சவரம்பு சட்டம் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தார். தனியார் வங்கிகளை பொதுவுடமை வாங்கிகளாக மாற்றியவர். மேலும் இந்திய தேசத்திற்காக தன் உயிரை ரத்தத்தை சிந்தியவர்.

குறிப்பாக இந்த தேசத்தில் தீவிரவாதம், பிரிவினை வாதம் வேற்றுமை வெறுமை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக் கொண்டு உள்ளோம், இதற்காகத்தான் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் மக்களை ஒன்றுபடுத்தி வேற்றுமை வெறுப்புணர்வு இருக்கக் கூடாது என்பதற்காக சுமார் 3700 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் அதில் தற்போது 1400 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்துள்ளார். இன்னும் பத்து நாட்களில் தென் மாநிலங்களில் பயணத்தை முடிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *