இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, புத்தூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சேவாதள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் கலந்துகொண்டார்.

மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, பேராசிரியர் பெஞ்சமின், மனித உரிமைதுறை ஜெயம் கோபி, கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பட்டேல்,

மாநகர் மாவட்ட தகவல் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன், கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் டேவிட், மகிளா மாவட்ட பொதுசெயலாளர் ஸ்டெல்லா, ஒளிபதிவாளர் இருதயராஜ், உள்ளிடோர் பலர் திரளாக கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *