திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி சாலையில் உள்ள அர் ரஹ்மான் பள்ளி வாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தலைமையில் நடைபெற்றது,விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்,
இதில் மண்டல தலைவர் மதிவாணன்,மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், தாஜ்தீன், ஆகியோர் கலந்து கொண்டனர், அர்ரஹ்மான் பள்ளிவாசல் செயலாளர் ஹைதர் அலி, தலைவர், சையது உஸ்மான், மற்றும் ஜமால் மைதீன்,இமாம் மீரான் முஹைய்யதீன். ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் பள்ளிவாசலுக்கு குடிநீர் வசதி, மற்று தனி அடக்கஸ்தலம் உள்ளிட்ட கோரி கேட்டு அமைச்சர் யிடம் மனு அளித்தனர்,
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில தலைமை கழக செயலாளர் ஓய் சாதிக் கான், முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மஜித் நன்றி கூறினார்
விழாவில் மாவட்டத் துணைச் செயலாளர் முபின்,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சாதிக் முகமது, ஜாகிர் உசேன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில இளைஞரணி தலைவர் கூனிமேடு முஹம்மத் முஸ்தபா, மாநில மாணவரணி தலைவர் ஆரிபுல்லா, மாநில இளைஞரணி செயலாளர் செஞ்சி முஹம்மத் ஹாஷிம்,உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,