திருச்சி தில்லைநகரில் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தசை சிசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று 610 இடங்களில் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ விசுவநாதம் மேல் நிலைப்பள்ளியில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் 6 சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்,ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த சக்கர நாற்காலி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.இதே போல் 13 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,மேலும் மகளிருக்கான இலவச தையல் எந்திரம், திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *