ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டுக்கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா யாதவ அறக்கட்டளை சார்பில் 31-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஸ்ரீ ராதா கிருஷ்ண திருமணவிழா திருச்சியில் இன்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு தலைவர் தங்கமணியாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வம்யாதவ் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்கமாக முதலில் கோபூஜையும் அடுத்ததாக சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ராதாகிருஷ்ண திருமண விழா நிகழ்ச்சியும், ராதா கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியும், ஆடல் பாடல் நிகழ்சியும் நடைபெற்றது. இதில் அறக்கட்டளைத் தலைவர் தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நடனமாடினர். அப்போது தலைவர் தங்கமணி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்