யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு யாதவ சமுதாயம் சார்பில் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதில் திமுக வென்ற 21 மாநகராட்சிகளில் மதுரை- நெல்லை – திருச்சி ஆகியவற்றில் இரண்டு மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோளாகும் ஆனால் ஒரு மேயர் பதவி கூட தற்போது தரப்படவில்லை என்பது வருத்தமென்றாலும், அதற்கு இணையாக தலைநகர் சென்னைக்கு திரு.சைதை மகேஷ் குமாரும், திருச்சிக்கு திருமதி திவ்யா தனக்கோடியும் ,நெல்லைக்கு திரு கே.ஆர் ராஜூ ஆகியோரை 3 மாநகராட்சிகளின் துணைமேயர்களாகவும் , இன்னும் பல இடங்களில் நகராட்சி தலைவர் போன்ற முக்கிய பதவிகளையும் எங்கள் யாதவ சமுதாயத்தினருக்கு திமுக வழங்கியிருப்பதை மனதார வரவேற்கின்றோம்.

மேலும் பெரும்பான்மை சமுதாயமாக இருந்தும் அரசு அரசியல் பதவிகளில் பின் தங்கியிருந்த யாதவ சமுதாயத்துக்கு பல்வேறு வகையில் தற்போது அங்கீகாரம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதற்காக அத்துணை முயற்சியும் எடுத்த அமைச்சர் பெருமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளும் நன்றிகளையும் பாராட்டுகளையும் யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் உரித்தாக்குகின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்