தமிழக பெண் போலீசார் பற்றி தரக்குறைவாகவும், அவதுாறாகவும் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார். இது தமிழக பெண் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பெண் போலீசார் கொடுத்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறி பெண் டி.எஸ்.பி., யாஸ்மின் என்பவர், சவுக்கு சங்கரின் பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீதும், அவரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்தனர்.. கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர், திருச்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கில் சிக்கிய மற்றொருவரான பெலிக்ஸ் ஜெரால்டை, கடந்த 10ம் தேதி திருச்சி தனிப்படை போலீசார் டில்லியில் கைது செய்து, ரயிலில் திருச்சி அழைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்துக்கு 13ம் தேதி பெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்பட்டார். பின், அங்கிருந்து, திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீதிபதி ஜெயபிரதா இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்சை, வரும், 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 இதையடுத்து பெலிக்ஸ், திருச்சி மத்திய சிறைக்கு, பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கடந்த 17ஆம் தேதி அன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து கோவை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவர் அங்கேயே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்கில் ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு பிணை (பெயில்) குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா ஒரு நாள் போலீஸ் காவலில் பெலிக்ஸ்யை விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் நாளை மதியம் 3 மணிக்கு ஆஜர் படுத்த கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். மேலும் இவர் என் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *