நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையில் வெளியிடப்படுகிறது. அதனையொட்டி திருச்சி ஜோசப் கல்லூரியின் காட்சி தொடர்புகள் துறையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோபுரா திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் விக்ரம், கதாநாயகிகள் மீனாட்சி, ஸ்ரீ நிதி செட்டி, லெட்சுமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதன் பின்பு கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய நடிகர் விக்ரம் பேசுகையில்.., திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் நியாயம் தான் வரும். இங்கு சின்ன வயதில் Sports-ல் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். இந்த படம் ஒரு Science Fiction, Emotion கலந்த படம். இந்த படம் இருமுகன் படத்தை தாண்டி “அதுக்கும் மேல இருக்கும்.”நல்ல புதவிதமான படமாக இருக்கும்.

ஒரு வாரத்தில் படம் வெளியாக உள்ளது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகி ஸ்ரீநிதி செட்டிஉங்களை போல, கல்லூரி மாணவி கதாபாத்திரம் உள்ளது, ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார்.நான் கல்லூரிக்கே போகவில்லை. என் அப்பா IAS படிக்க சொன்னார். இந்த கல்லூரி முதல்வர்தான் எனக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு. சினிமா என்றால் எனக்கு பைத்தியம்.இப்பக்கூட கேவலமா(தாடியோட) இருக்கேன், என்னுடைய அடுத்த படத்திற்க்கா வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ரசிகர்களுக்காக எப்படி இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு .ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.எனக்காக சிலர் பச்சைக் குத்துகிறார்கள் ஆனால் அவர்களை நான் சந்திக்கக்கூட முடியவில்லை. இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம். நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள். ஆனால், இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் தான் கொலை செய்து கொள்கிறார்களே என்ற கேள்விக்கு. இந்த Generation அப்படி ஆகிவிட்டது.உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை உறுதியாக செய்ய வேண்டும்.என்னால் நடக்கவே முடியாது,அதை கடந்து நடிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் அப்டேட். சொல்லுங்கள் என கேட்டதுக்கு. பொன்னியின் செல்வன் கதை சூப்பராக இருக்கும்.அந்த கதையை தாண்டி ஒரு வலிமையான நாவல் வந்தது இல்லை‌. அந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *