பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான தொட்டியம் சரவணன் தலைமையில் நடந்தது.
முன்னதாக .மாவட்ட தலைவர் கே.எம்.சரவணன் வரவேற்றார். ஐ.என்.டி.யு.சி அகில இந்திய பொதுச் செயலாளர் அமீர்கான், ஐ.என்.டி.யு.சி. மாநிலத் தலைவர் தேவராஜன்,முதன்மை துணைத் தலைவர் ரகுராமன் ஆகியோர் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல்.வி.ரெக்ஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஜி மகேந்திரன்,
மாவட்ட துணை தலைவர் முரளி, கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், சிறுபான்மை பிரிவு அப்துல் குத்தூஸ் ஐ. என்.டி.யு சி .வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட ஐ.என்.டி.யு.சி தலைவர் புத்தூர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.