தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ந் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

 இதையடுத்து அந்த 12 பேரில்,  சாமி, ரவி ,திலீப் ,சிவா ராஜ்குமார் ,சத்யராஜ் சுரேந்தர் ஆகிய 6-பேர் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேற்கண்ட 6 பேருக்கும், ரத்தப் பரிசோதனை, இசிஜி,எக்ஸ்ரே, இதய பரிசோதனை, உடல் பரிசோதனை எடுக்கப்பட்டது. மேலும்அவர்கள் மனதளவில் சீராக உள்ளனரா? என்பது கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையானது சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது . இந்த பரிசோதனை முடிவுகளை வருகின்ற 21ந் தேதி திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையை பொறுத்து 12 பேரை பெங்களூருக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தலாமா? என்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *