திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மயானத்திற்கு செல்லும் சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்து கொடுத்ததை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்,

பின்னர் திருச்சி மாநகராட்சி 64 வார்டுக்குட்பட்ட காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் ரூ2.25 மதிப்பில் போர்வெல்லுடன் கூடிய மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் பொதுமக்கள் குளத்தில் எளிதாக இறங்கி குளிக்கு வண்ணம் படித்துறை ரூ 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் கூத்தைப்பார் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாபர் சாலை பகுதியில் தலா ரூ 2.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் உடன் கூடிய குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து மேலத் தெரு பிள்ளையார் கோவிலிலிருந்து வடக்கு தெரு பிள்ளையார் கோவில் தெரு வரை ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், இந்நிகழ்வுகளில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கருணாநிதி, காட்டூர் பகுதி பிரமுகர் நீலமேகம், கூத்தைப்பார் பேரூர் பிரமுகர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் சத்யாகோவிந்தராஜ், கூத்தைப்பார் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *