தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து அதன்படி திருச்சி அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் தினமும் 50 பேருக்கு ரெம்டெசிவர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி முன்பாக திருச்சி பெரம்பலூர் தஞ்சாவூர் கரூர் திருவாரூர் அரியலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு தெரிவித்து போர்டு மாட்டப்பட்டிருந்தது.3-ம் நாளான இன்று 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெளியே காத்திருந்த 500க்கும் மேற்பட்டோர் தினமும் தாங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எங்களுக்கு மருந்து கிடைப்பதில்லை. எனவே இங்கு வந்திருந்த 50 பேருக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கி அடுத்த நாள் வந்து மருந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு கூறி திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.