சென்னையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மணிகண்டன் வயது 61. தற்போது திருச்சி மாந்துறை பொம்பரம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை லால்குடி பகுதி உள்ள தாலுகா அலுவலகத்தில் தனது சொந்த பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர். இருசக்கர வாகனத்தை தாலுக்கா வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது பணி முடித்து மீண்டும் வந்து தனது வண்டியை எடுக்க முற்பட்டபோது வண்டி இயங்க வில்லை.

உடனடியாக வண்டியின் பேட்டரியை சரி செய்து விட்டு மீண்டும் வண்டியை இயக்க முற்பட்டபோது வண்டியின் பேட்டரியில் இருந்து திடீரென தீப்பற்றியது தீயை அணைக்க அருகில் இருந்த டீக்கடையில் தண்ணீர் எடுத்து வருவதற்குள் தீ மளமளவென இருசக்கர வாகனம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது உடனடியாக அருகில் இருந்தவர்கள் லால்குடி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் லால்குடி தாலுக்கா அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *