லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு லைட்டி கமிஷன் அமலா அன்னை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மண்டல செயலாளர் கருணை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் ராபர்ட் வில்லியம் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் பொதுச் செயலாளர் செல்வி கிரேனப்பு கலா ராணி முன்னிலை வகித்தார். விழாவில் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் வெளியீடான “பேரியக்கம்” இதழை இயக்கத் துணைத் தலைவர்கள் வேதக்கண் மற்றும் மறைதிரு ஜோயல் சந்தான சேகர் ஆகியோர் வெளியிட மறைத்திரு செல்லதுரை ஆயர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். மேலும் இயக்கத்தை திருச்சபை வளர்ச்சிக்கான காரியங்களில் ஈடுபடுத்தி கரை திரையற்ற நிர்வாகம் ஏற்படவும் திருச்சபையால் ஆன்மீக வளர்ச்சி ஏற்படவும் உழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விழாவில் இளைஞர் அணி தலைவர் ரஞ்சித் பிரபு, இணைச் செயலாளர் எபினேசர் ராஜ செல்வம், தலைமை நிலைய செயலாளர் ஜான்சன் நேசப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக சத்திய நேசன் நன்றியுரை கூறினார்.