தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் ஆதிக்கத்தை தடுத்திட வேண்டும் எனக்கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் (வட மாநிலத்தவர்) ஆதிக்கத்தை தடுத்திடவேண்டும் , உள் நுழைவு சீட்டு முறையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிச்சட்டமாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி

தமிழக வாழ்வுரிமை கட்சியினை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி ராமகிருஷ்ண பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கண்டன உரை ஆற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்