தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் தலைமை பொதுச் செயலாளர் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் புரசை லோகநாதன்,ஊட்டி சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் ஈஸ்வரி கணேசன்,

மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் ரமேஷ் என்கிற தேவபிரியன் , மாநில செயலாளர் சதீஷ், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் சுந்தர வடிவேல், லோக் ஜனசக்தி கட்சி செயல் வீரர் அஜய், வடசென்னை மாவட்ட தலைவர் முத்து குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *