வருகிற ஜனவரி 7 ஆம் தேதி திருச்சியில் மக்கள் அதிகாரம் தலைமையில் பாசிச BJP யை தோற்கடிப்போம்! INDIA வை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய பிரம்மாண்ட பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. அதனை விளக்கும் வகையில் நேற்று மாலை திருச்சி எடத்தெரு அண்ணாசிலை அருகில் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநகர செயலாளர் கார்க்கி தலைமை தாங்கினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில பொருளாளர் இப்ராஹிம், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா மற்றும் மக்கள் அதிகாரத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காவிரி நாடான் ஆகியோர் தேர்தலில் மக்கள் அதிகாரம் எடுத்த நிலைபாட்டை பற்றியும், ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டின் அவசியத்தை விளக்கியும் பேசினார்கள். ம.க.இ.க மையக் கலைக் குழு பொறுப்பாளர் லதா தலைமையில் பாடல்கள் பாடப்பட்டது. இறுதியாக மக்கள் அதிகாரத்தின் மாநகர செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *