திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி ஈபி ரோட்டில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.  முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் கவிஞர் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்:-

இந்த பொது உறுப்பினர் கூட்டத்துக்கு 2000 பேருக்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன் அந்த அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருந்து பணியாற்றுவேன் நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பாகத்தான் இதனைப் பார்க்கிறேன்‌. திமுக கழக முதன்மை செயலாளர் கே என் நேரு உள்ளிட்ட முன்னோடிகளின் வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்டம் தொடர்ந்து வெற்றிக் கொடிகளை நாட்டி வருகிறது. இந்த நேரத்தில் ஆறாவது தீர்மானமாக வருகிற ஒன்பதாம் தேதி 70 வது வயதை அடி எடுத்து வைக்கும் முதன்மைச் செயலாளருக்கு நேருவுக்கு வாழ்த்துகளை கரவொலி மூலம் தெரிவிப்போம்.

குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்போம் அந்த வெற்றியை பெற பாடுபட வேண்டும் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக மண்டல குழு தலைவர் மதிவாணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *