திருச்சி மாவட்ட படைவீரர், முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15.02.2023 புதன் கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டைப் பிரதிகளில் மனுக்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.