திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கூட்டம் தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும் ஆலோசனை கூட்டத்தின் முக்கியமான 6 கோரிக்கைகள் நிறைவேற்றபட்டது. பின்வருமாறு, வட்டார கிளை தேர்தல், மாவட்ட கிளை தேர்தல், ஓய்வூதியம் பெற ரத யாத்திரை மேற்க்கொள்ள திட்டம், குறிப்பாக வரும் 30 ஆம் தேதி புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் ரங்கராஜன் பேசியது..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக எங்களது கோரிக்கைகளை ஏற்று மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பல நாட்களாக ஓய்வூதியம் பெறப்படாமல் உள்ளது. பல பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் . மேலும் இதுவரை எங்களது நிறைவேறாத கோரிக்கையை வலியுறுத்தி, மாபெரும் ஆர்ப்பாட்டமும், ரத யாத்திரையும் இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.