திருச்சி பீமநகா் பகுதியில் கடந்த சில நாட்களாக திருடா்கள் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் தொடா்கதையாகி வருகிறது. குறிப்பாக பீமநகா் பாலத்தின் கீழ் பகுதியில் தனியாக செல்பவா்களிடம் செல்போன்களை பறிப்பது, குழுவாக நின்று கொண்டு அவ்வழியாக வரும் ஆட்களை மிரட்டி பணம் பறிப்பது பணம் தராதவா்களை உடம்பில் கத்தியால் கிழிப்பதும் தொடா்கதையாகி வருகிறது. குறிப்பாக பீமநகா் பகுதியில் தொடர்ந்து இது போல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது, அதில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கல்கி மஹால் எதிாில் உள்ள மளிகை கடைகராா் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு வெட்டப்பட்டார்.
சில வாரத்திற்கு முன் வக்கில் ஒருவா் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார், நடந்து சென்ற பெண்ணின் நகையை பறித்தது. வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடு போவது, கடந்த இருதினங்களுக்கு முன்பு நடந்து சென்றவரின் மொபைலை இரவு 7.30மணி அளவில் மூன்று நபா்கள் கொண்ட கும்பலால் திருடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் இரவு ஏழு மணிக்கு மேல் பீமநகா் பாலத்தின் கீழ் பொது மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் நடமாட முடியவில்லை. பாலத்தின் கீழ் வாகன நிறுத்தம் முதல் இரயில்வே கேட் வரை சமூக விரோதிகள் நிறைய போ் கஞ்சா அடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த நேரங்களில் காவல் துறையினர் ரோந்து வருவது இல்லை. இதனால் பீமநகா் மக்கள் இரவு நேரங்களில் இப்பகுதி வழியாக வருவதற்கு அச்ச படுகிறார்கள் போலிசாா் விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால் மேலும் பல வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என பாலக்கரை போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பாலக்கரை போலீஸார் பீமநகர் மேம்பாலத்தின் அடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டிவி திருடியதாக மூன்று சிறுவர்களும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.