வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகிறது. திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படும் வழிகளில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

கொடி அணிவகுப்பு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து தொடங்கப்பட்டு காந்தி மார்க்கெட், பெரியகடைவிதி, தெப்பக்குளம் பெரியசாமி டவர் வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது.

 இந்த கொடி அணிவகுப்பில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆணையர்கள் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதிரடிப்படையினர் ஊர்காவல் படையினர் மற்றும் கூட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றது.

 

கொடி அணிவிப்பு ஊர்வலத்தையொட்டி செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

திருச்சியில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பதற்றத்தை தணிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது. விநாயக சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா நடத்துபவர்களிடம் ஒத்துழைப்பை கேட்டுள்ளோம். அதற்குரிய கூட்டங்களும் நடைபெற்று உள்ளது. இந்த வருடம் சிசிடிவி அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்