திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர் பொன்மலைப்பட்டி செல்லும் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் கிளம்பும் வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபடுகிறது.

 

பஸ்கள் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிடுவதாலும், ஏறுவதாலும் நெரிசல் தொடர்கிறது. மேலும் பஸ்சை ஒட்டியே வாகனங்கள் வருவதால் பொன்மலைப்பட்டி இருந்து வரும் நபருக்கும் தெரிவது இல்லை, விபத்துகள் தினத்தோறும் நடக்கிறது. அதுப்போல ஏர்போர்ட் பகுதி இருந்து வரும் பஸ்கள் ரோடு கடக்கும் இடத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிடுவதாலும், ஏறுவதாலும் நெரிசல் தொடர்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர்

இந்த பஸ் நிறுத்தத்தை சற்று தள்ளி ஜெயில்கார்னர் ரோடு கடந்து தெற்கு பகுதியில் அமைக்கலாம். இதனால், பொன்மலைப்பபட்டி வழியாக செல்லும் வாகனங்கள் நெரிசலின்றி, விபத்துகள் இல்லாமலும் செல்லும். தொடர்ந்து விபத்துகள் நடக்கும் பகுதியான திருச்சியிருந்து புதுக்கோட்டை செல்லும் பஸ்களும், புதுக்கோட்டையிருத்து திருச்சி வரும் பஸ்களும் பொன்மலைப்பட்டி ரோடு பகுதிகளில் பஸ்களை நிறுத்தமால் தள்ளி பஸ்கள் நிறுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *