திருச்சி மாநகராட்சி 56 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் கருமண்டபம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் இப்பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளான குடிநீர்ப் பிரச்சனை சாலை வசதி தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதேபோன்று 56 வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் மாந்தோப்பு, குளத்துகரை, தெற்கு தெரு பகுதியில் திமுக வெற்றி மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த 10 மாதங்களில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் உங்கள் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து வருகிறார்கள். ஆகவே 56 வது வார்டில் வளர்ச்சி திட்டங்கள் தொடர அனைத்து நலத்திட்டங்களும் உடனுக்குடன் கிடைத்திடவும்,

நமது வார்டை முன்மாதிரியாக மாற்றிட திமுக வேட்பாளராகிய மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன் எனக்கு ஆதரவு தாருங்கள் திருச்சி மாநகரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *