மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் ஆலோசனைபடி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல், விருப்பத்தின்படியும், மூன்று( ஒரே காவல் நிலையம்) மற்றும் 5 வருட காலம் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையிலும் – கலந்தாய்வின் அடிப்படையிலும் பணி இட மாறுதல் – தொடர்பாக விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் விரைவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பணி இட மாறுதலுக்கான உத்தரவுகளை வழங்குவதாக தெரிவித்தார். பல வருடங்களுக்கு பிறகு காவல்துறையினரை நேரில் அழைத்து விருப்ப பணி இடமாறுதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *