திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை அருகே திருச்சி மாநகராட்சி சார்பாக ரூபாய் 393இலட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2- நவீன சாலை ஓரத்தில் உள்ள மணல்திட்டுக்களை சுத்தம் செய்யும் வாகனங்கள் ( Road sweeping Machine- 2nos) மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி மாநகர தூய்மை பணி சேவைக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நகர பொறியாளர் அமுதவல்லி, உதவி ஆணையர் செல்வபாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், ஆகியோர் உள்ளனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு பேசுகையில்…

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் நொச்சியம் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட மத்திய அரசுக்கு திட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்புற பகுதிகளையும் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்படும். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார். உள்ளாட்சித் தேர்தல் உள்ளபடியே நேர்மையாக நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் முறைகேடுகள் நடந்தன. அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி? எங்களுக்கு வந்தால் ரத்தமா? என்று கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *