திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. ஏற்கனவே நான்கு கோட்டமாக செயல்பட்ட வந்த மாநகராட்சி தற்போது 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு மண்டலத்தில் தேவைப்படும் புதிய அலுவலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர், ஏர்போர்ட், எல்.ஐ.சி காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான கட்டிடம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அனுமதி பெறுவதற்கான அலுவலகம் சுப்பிரமணியபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனை கே.கே.நகர் பகுதியில் அமைப்பதற்கான பணிகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக திருச்சி கே.கே.நகர் பகுதியில் அன்பில் தர்மலிங்க நகரில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அந்த அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த அந்தப் பகுதியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் மைதானத்தில் தினமும் 150 க்கு மேற்பட்டோர் நடைபயற்சி மேற்கொண்டு வருகின்றன. கராத்தே, கால்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் விளையாட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும். அப்பகுதியில் உள்ள கே.கே.நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பில் நடைபெறும் சிறப்பு விழாக்களும் இந்த மைதானத்தில் அரசு அனுமதி உடன் நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள கட்டிடத்தில் தேர்தல் வாக்கு மையமும் செயல்பட்டு வருகிறது. கேகே.நகர் பகுதியில் சத்தியவாணி முத்து தெரு, ராஜாராம் நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 15க்கு மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன அந்த இடங்களில் இந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை கட்டும் பணியை அரசு மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும்இந்த மைதானத்தில் அரசு அலுவலகம் வந்தால் மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் தடையாகவும் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநகராட்சியுடன் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்

இன்று காலை கட்டிடம் கட்டும் பணி துவங்க பொக்லைன் இயந்திரத்துடன் வருகை தந்த கட்டுமான நிறுவனத்தின் ஊழியரிடம்கே.கே.நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் சந்திரமோகன் நிர்வாகிகள் விவேகானந்தன் ராம்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கே.கே.நகர் காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் தொலைபேசி மூலம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கட்டுமான ஊழியர்கள் உடனடியாக தங்களது பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்