திருச்சி ஜங்ஷனில் உள்ள ரயில்வே மண்டல பல் துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் :

இரண்டு ஆண்டுகளாக விடாமல் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி நாள் இன்று.

ஒரு புள்ளியை கூட மாற்ற மாட்டோம், நாடாளுமன்றமே நடைபெற விட்டாலும் சரி என்று இருந்த பாஜகவும் அந்த கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியும் மண்ணை கவ்விய நாள் இன்று. இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் – இதில் விவசாயிகளோடு காங்கிரஸ் கட்சி இருந்தது.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது ஓரான்டிற்கு முன்பாக கூறியிருந்தார் : இந்த அரசு எண்று இருந்தும் இந்த சட்டங்களை வாபஸ் பெற்று தான் ஆக வேண்டும் என்று.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஐடி துறைக்கு செல்கிறார்களே தவிர அரசு வேலைக்கு வர தயாராகாமல் உள்ளனர் – ரயில்வே துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளது, ரயில்வே சார்ந்த தேர்வில் தேர்வு எழுதி தமிழக இளைஞர்கள் இந்த வேலையை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீட் தேர்வு வேண்டாம் என்றால் அதற்கு சட்டரீதியாக தான் முடிவு கொண்டுவர முடியும் – தமிழகத்தைப் போல் மற்ற மாநிலங்களிலும் நீட் தேர்வு வேண்டாம் என்கிற நிலை தற்போது தான் வந்து கொண்டுள்ளது, தமிழக முதல்வர் நீட் விவகாரத்தில் மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,அதனை நான் வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.