தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைத்தலைவர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே விட போலீசார் மறுப்பு தெரிவித்ததால் கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். மேகதாது அணை கட்டாமல் இருக்கவும் அணை கட்ட உதவிட வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உரிய வழக்கு போட வேண்டும் என்றும், உரத்தின் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது ஆகவே அதையும் குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் டி.பி.சி திறந்து விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காமல் நெல் கொள்முதல் செய்ய உதவிட வேண்டும். கோடை காலத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காததால் 100 நாட்கள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தற்பொழுது வருடம் முழுவதும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தி யதால் மழைக்காலங்களில் நடவு நட, களையெடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நீண்ட நேரமாக கலெக்டர் அலுவலக வாசலில் உட்கார்ந்துகொண்டு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அய்யாக்கண்ணு தரப்பிலான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளை சந்தித்து பேசிய டிஆர்ஓ கோரிக்கைகளைைப் பெற்றுக்கொண்டு விவசாயிகளை கலெக்டர் அலுவலகம் உள்ளே அழைத்துச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *