எருக்கன் அல்லது எருக்கு (Calotropis) மூலிகைமருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. திருஎருக்கத்தம் புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும். எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலமரமாக உள்ளது.

கடும் வறட்சியிலும் வளரும் தன்மை கொண்டவை எருக்கன் செடிகள். இச் செடிகளில் பல வகைகள் உண்டு, என்றாலும் மிகுதியாகக் காணப்படுவது கத்தரிபூ நிற (நீல) எருக்கம் செடி. அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி ஆகும். விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது சாலையோரங்களில் கேட்பாரின்றி முளைத்து கிடக்கும் ஒரு அற்புதமான மூலிகை என்றே சொல்லலாம். இதன் இலை, வேர், பட்டை, பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை.

குதிகால் வலி:-

தாங்க முடியாத குதிகால் வலி உள்ளவர்கள் நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை, வைக்க வேண்டும். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வாதம் முற்றிலும் குணமாகும்.

விஷ கடி:-

குளவி, தேனீ, தேள் கொட்டும் விஷம் முறிய அவை கொட்டும் இடத்தில் எருக்கன் பாலை தடவ விஷம் இறங்கும். பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு ஐந்து எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட்டு விட வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன் பின்னர், மருத்துவரிடம் சென்று, சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

ஆறாத புண்கள்:-

ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர விரைவில் புண்கள் ஆறிவிடும்.

பல் ஆரோக்கியம்:-

நூறு கிராம் எருக்கன் பூவுடன் பத்து கிராம் உப்பு சேர்த்து அரைத்து வடை போல் தட்டி உலர்த்தி குடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல் சொத்தை, புழு, பல் கூச்சம் யாவும் குணமடையும். சிலருக்கு பற்களில் மஞ்சள் நிற கறைகள் படிந்து முக அழகினை கெடுத்துவிடும். இதற்கு எருக்கன் இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை, பல்பொடியாக பல்லில் தேய்த்தால் கறைகள் நீங்கி விடும்.

மலச்சிக்கல்:-

பத்து மில்லி விளக்கெண்ணெயில் மூன்று துளி எருக்கன் இலை சாறு விட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்துவிடும்.

ஆஸ்துமா:-

வெள்ளருக்கன் பூக்களை சேகரித்து காம்பு, உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி விட்டு சிறிது மிளகு சேர்த்து அரைத்து மிளகு மாத்திரைகளாக செய்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரை வேலைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உறைத்து சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளியாகும். மேலும் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்வெள்ளருக்கன் வேர்க்கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள் விஷவண்டுகள் வராது என்கிற நம்பிக்கை இன்றும் நமது மக்களிடையே இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்