திருச்சி கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமலை இவரது மனைவி பாப்பா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு நான்கு மகள்கள் அதில் மூத்த மகள் காந்திமதி அவரது மகன் தீபக் இவரது மனைவி மகாலட்சுமி மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக நவலூர் குட்டப்பட்டை சேர்ந்த சுரேஷ் இருதயராஜ் என்பவரிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூபாய் 3,24000/- கடன் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக வீட்டை ஈடாக எழுதி தர வேண்டும் என்று கேட்டதின் பேரில் அவர்கள் காட்டிய பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். இந்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் திரும்ப சுரேஷ் இருதய ராஜிடம் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வீட்டின் ஒரு பகுதியில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு தனி அறை கட்டியுள்ளார். இதுபற்றி அறிந்து வந்த சுரேஷ் இருதயராஜ் மற்றும் 15க்கும் மேற்பட்ட அடியாட்கள் பணத்தை திரும்பத் தராமல் வீடு கட்டக்கூடாது எனக்கூறி மின் மோட்டார் பாக்ஸ் மற்றும் ஆஸ்பட்டஸ் சீட் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு சென்று விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் சுரேஷ் இருதயராஜிடம் கடன் வாங்கியதற்கு ஈட்டுப்பத்திரமாக தான் அவர்கள் காட்டிய பாத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் சொத்தை அபகரிக்கும் நோக்கில் எனது வீட்டை அவர்கள் பெயரில் பத்திரம் செய்து விட்டதாக தற்போது கூறி தொல்லை கொடுத்து வருகின்றனர் மேலும் எங்களை அடித்து உதைத்து மின்னினைப்பையும் துண்டித்து விட்டனர் மேலும் மின் இணைப்பிலும் இருதயராஜ் பெயரை மாற்றியுள்ளனர் எனது வீட்டை மோசடியாக பத்திரம் பதிவு செய்தது தற்போது தான் தெரிய வந்தது. ஆகவே சுரேஷ் செல்வராஜ் மற்றும் 15 நபர்கள் மீது தீண்டாமை தடுப்புச் சட்டம் நில அபகரிப்பு குற்றம் கொலை மிரட்டல் சொத்து அழித்தல் ஆகிய குற்றங்களுக்காக தக்க நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *