கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு, புறநகர் தெற்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் MP குமார் தலைமையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, பகுதி செயலாளர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, வட்ட செயலாளர் ராஜா, வட்ட கழக செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.