திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள மதர்லேண்ட் ஹோட்டலில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகரும், முக்குலத்தோர் புலிபடை தலைவருமான கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது..,

செய்தியாளர்கள் சந்திப்பில் கருணாஸ் கூறுபோபொழுது..

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலினை நான் முழுமையாக வரவேற்கிறேன் மேலும் தமிழகத்தின் முதல்வர் பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். எங்களின் முக்குலத்தோர் புலிப்படையின் 12 அம்ச கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றினால் வாழ்நாள் முழுவதும் அவருக்கு உண்மையான விசுவசியாக இருப்பேன் என கூறினார். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர் பார்த்திருக்கிறார்கள் அதனால் தான் திமுக வெற்றி பெற்றது.
எங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என அதற்கு போராட்டம் செய்வது தமிழகத்தில் தான் நடைபெறுகிறது எனவும் அது மிக வேதனையான ஒன்று என கூறினார்.
காமராஜ், அண்ணா இதே தமிழகத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்,
யாரையும் குறைத்து எடை போட கூடாது.
அதிமுக வில் எதிர்க்கட்சி தலைவர் யார் என அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.
நான் தேவர் பேரை சொல்லி அரசியலுக்கு வந்தேன் , என் மீது ஜாதி சாயம் பூசப்படுகுறது, அரசியலை பொறுத்தவரை அங்கு சமுதாயம் வைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றதும் அவரிடம் அனுமதி பெற்று கண்டிப்பாக அவரை நேரில் சந்திப்பேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.