ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி வருகிற மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.