திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், மறுமலர்ச்சி திமுக வேட்பாளராக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சார உரை ஆற்றினார். அப்போது ‘ஜனநாயகத்தை, இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணியின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை’ என, பேசினார்.

இதில் திமுக முதன்மைச் செயலாளர் – தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, திருச்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *