ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் முனிசிபால் காலனி பகுதியில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு முனிசிபால் காலணியில் கடந்த 1968 ஆம் ஆண்டு நகர சுத்தி தொழிலாளர்களுக்கு அன்றைய நகர மன்ற தலைவர் வெங்கடேச தீட்சிதர் ஸ்ரீரங்கம் 1வது வார்டு பகுதியில் உள்ள மூலத்தோப்பில் முனிசிபால் காலனியில் எங்களுடைய முன்னோர்களுக்கு இலவசமாக இடத்தை வழங்கினார் ஆனால் இன்று வரை அரசு பட்டாவை வழங்கவில்லை எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உதவி செய்யக்கோரி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *