ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும் அறங்காவலர் நியமன விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும் . அறங்காவலர்கள் குழு தலைவர் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் ஸ்ரீரங்கம் கோவில் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மற்றும் வைணவ மரபுகளை அறிந்த உள்ளூர்க்காரர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். மூலவர் அமைப்பினை மாற்றியது மற்றும் சுற்று கோவில்களில் இருந்த ரூபங்களை அப்புறப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து

உரிய அறிக்கை அரசுக்கு அனுப்பிடவும், நிலங்கள் பெயர்மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேரடியாக ஐஏஎஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியை நியமித்து நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும். தரிசனத்திற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பு கட்டணம் ரூ50, விரைவு சேவை கட்டணம் 250 என நடைபெறும் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி, கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு தனி நபரிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றி வரும் நபர்களை கோவில் பணியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். ராமானுஜரின் நிர்வாகமுறை படி பூஜா காலங்கள், உள்துறை நிர்வாகம் ஆகியவை மரபு மாறாது நடைபெற நிர்வாக அதிகாரியின் தலையீடு இல்லாமல் கோவிலில் உள்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளை கோபுரம் முன்பு அரங்கன் பாதுகாப்பு பேரவையினர் மற்றும் பொதுமக்கள் ‌ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *