108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தற்பொழுது வைகுண்ட ஏகாதசி விழா 22 ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இவ் திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் வந்து அரங்கனை தரிசித்து செல்கின்றனர்.

கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில், மழை. பனியில் இருந்து காக்கும் வகையில் சுமார் 800 பக்தர்கள் அமரும் வகையில் பிரமாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடாரத்தில் குடிநீர் வசதியும், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூடாரத்தில் ரூபாய் ரூ 25.5லட்சம் மதிப்பீட்டில்பப்சீட்டில் மேற்கூரை, கியூலைன் பேரிகார்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா மற்றும் ரூ 100/- கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் அமர்ந்து கொள்ள ரூ 42லட்சம் மதிப்பில் 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *