தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆலோசனை படி இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் முன்னிலையில்தொடங்கப்பட்டது .

முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் முனைவர்.ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார். முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர் , ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *