ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இன்று மாலை வந்தார்.அவருக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் மேள தாளங்கள் முழங்க, மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சிவராஜ் சிங் சவுஹான் தனது மனைவியுடன் கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் இராமானுஜர் சன்னதி, கார்த்திகை கோபுரம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார் கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆரியபட்டாள் வாசல் வழியாக சென்று கம்பத்தடியை வழிபட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார்.

பின்னர்தாயார் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு வடக்கு வாசல் வழியாக காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது நமது நாடு மற்றும் மத்திய பிரதேசம் இயற்கை வளத்துடனும் வளர்ச்சி அடையவும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் வளமாகவும் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்தேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *