திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வெளிநாட்டவர்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் வசதி படைத்தோர் தாமாக முன்வந்து கோவிலுக்கு நன்கொடைகள் மற்றும் கோவிலுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர்.

அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில் செயல்பட்டு வரும் அன்னதான கூடத்தில் நாளொன்றிற்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்தி செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி இன்று சென்னையை சேர்ந்த பக்தர் ஜெகநாதன் – உஷா ஜெகநாதன் தம்பதியினர் அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உபயமாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினார்கள் , முன்னதாக அர்ச்சகர் சுந்தர்பட்டர் சிறப்பு பூஜை செய்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *